டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்குக் காய்ச்சல், தொண்டை வலி உள்ளதால் அவருக்குச் செவ்வாயன்று கொரோனா சோதனை செய்யப்பட உள்ளது.
ஞாயிற்றுக்கிழமை முதல் அரவிந்த் கெஜ்ரிவாலுக்குக் காய்ச்சல், தொண்டைவலி உள்ளதால் அவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமோ என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
இதனால் ஞாயிறு பிற்பகல் முதல் தான் பங்கேற்க இருந்த கூட்டங்கள் அனைத்தையும் ரத்து செய்துள்ளதுடன், வீட்டிலேயே அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
செவ்வாயன்று அவர் கொரோனா சோதனை செய்துகொள்ள இருப்பதாக ஆம் ஆத்மி தலைவர்களில் ஒருவரான சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.
திங்கள் காலை நிலவரப்படி டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 654 ஆக உள்ளது குறிப்பிடத் தக்கது.