மும்பையில் தனியார் நிறுவனங்கள் செயல்படத் தொடங்கியதை அடுத்துச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.
நாட்டின் மற்ற நகரங்களைவிட மும்பையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ளது. ஐந்தாம் கட்ட ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் மும்பையில் தனியார் அலுவலகங்கள் திங்கள் முதல் 10 விழுக்காடு பணியாளர்களைக் கொண்டு செயல்படலாம் என அறிவிக்கப்பட்டது.
அதேபோல் மாவட்டத்துக்குள்ளேயே பொதுமக்கள் செல்வதற்கு அனுமதிச் சீட்டு தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் இன்று காலையில் மும்பையின் மேற்கு விரைவு நெடுஞ்சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்தபடி முன்னேறிச் சென்றன.