ஜூன் 3ம் தேதி வரை நாடு முழுவதும் சுமார் 4 ஆயிரத்து 228 ஷ்ராமிக் ரயில்கள் இயக்கியுள்ளதாக, மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ரயில்வேத்துறை தொடர்பான வழக்கு ஒன்றில் பதிலளித்த மத்திய அரசு, நாடு முழுவதும் இயக்கப்பட்ட சிறப்பு ரயில்கள் மூலம் 57 லட்சத்து 22 ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு திரும்பியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்திற்கு 1,695 ரயில்களும், பீகார் மாநிலத்திற்கு 1,519 ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன.
இந்தியா முழுவதும் உள்ள தொழில்துறை பிரிவுகளிலிருந்து வீடு திரும்பிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களில், 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்த இரு மாநிலங்களில் உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.