உள்துறை அமைச்சகம் அனுமதித்தால் ஆகஸ்ட் 15ம் தேதிக்குப் பின்னர் பள்ளிகள் திறக்கப்படும் என்று மனித வள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.
சிபிஎஸ்இ தேர்வுகள் ஜூலை மாதத்தில் நடத்தப்பட்டு ஆகஸ்ட் மாதத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்றும் புதிய கல்வியாண்டு அதன்பின் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தனியார் செய்தி சேனலுக்கு பேட்டி அளித்த அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் பள்ளி வகுப்பு நேரங்கள் மாற்றியமைத்தல், மாணவர்களின் வருகையை குறைத்தல் , சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட புதிய நடைமுறைகளை பள்ளிகளில் அமல்படுத்துவது குறித்து பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.