அசாம் மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிலையங்களிலும் நடப்பு கல்வியாண்டில் எந்தவித கட்டணமும் இன்றி மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசியுள்ள அம்மாநில கல்வித்துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு கூடுதல் சுமை ஏற்படாத வகையில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் வரையில் மாணவர்கள் சேர்க்கை இலவசமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும், மறைமுக கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது எனக் கூறிய அமைச்சர், கல்வித் துறை விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாயும் மற்றும் பாடநூல்கள் வாங்குவதற்காக அனைத்து மாணவர்களுக்கும் ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.