வெளிநாட்டு விமானங்கள் நுழைவதற்கு பிறநாடுகள் அனுமதி அளித்த பிறகே சர்வதேச விமானப் சேவை குறித்து முடிவெடுக்கப்படும் என, விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ஊரடங்கு காரணமாக சர்வதேச விமானப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பல்வேறு காரணங்களுக்காக வெளிநாடு செல்லும் அவசியம் கொண்டவர்களுக்காக விமான சேவையை தொடங்கும் தேவை அதிகரித்துள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம், கொரோனா முன்னெச்சரிக்கையாக பலநாடுகளில் வெளிநாட்டு விமானங்களை அனுமதிப்பதற்கான சூழல் வெகுதொலைவில் உள்ளதாகவும், உரிய தளர்வுகள் கிடைத்ததும் விமான சேவை தொடங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.