தொல்லியல் துறையால் பராமரிக்கப்படும் 820 நினைவு சின்னங்கள் இன்று திறக்கப்படுகின்றன.
நாடு முழுவதும் தொல்லியல் துறையால் பராமரிக்கப்படும் 3 ஆயிரத்து 691 நினைவு சின்னங்கள் உள்ளன. கொரோனா பரவல் காரணமாக, கடந்த மார்ச் 17-ந் தேதி இவை மூடப்பட்டன. பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், இவற்றில் வழிபாட்டு தலங்களுடன் கூடிய 820 நினைவு சின்னங்களை திறக்க மத்திய கலாசார அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.
பார்வையாளர்கள், மத்திய சுகாதார அமைச்சகம் வகுத்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும், ஆன்லைன் டிக்கெட் எடுத்திருக்க வேண்டும் என்றும் கலாசாரத்துறை அமைச்சர் பிரகலாத் படேல் தெரிவித்துள்ளார்.