மகாராஷ்டிராவில், கொரோனாவுக்கு 33 காவல்துறையினர் பலியாகி உள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்த 33 பேரில் 18 பேர் மும்பை போலீசார் என்றும், 2,562 காவல் துறையினருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் அரசு தெரிவித்துள்ளது.
ஊரடங்கு காலத்தில் காவலர்கள் 260 பேரை தாக்கியதாக 841 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசார் மீது கும்பல்கள் நடத்திய தாக்குதலில் 86 பேருக்கு காயம் ஏற்பட்டது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட சுகாதார பணியாளர்களில் 45 பேரும் தாக்குதலுக்கு ஆளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கை மீறி வாகனம் ஓட்டிய குற்றத்திற்காக 23,866 பேர் கைது செய்யப்பட்டதுடன், 80 ஆயிரத்திற்கும் அதிகமான வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அரசு தெரிவித்துள்ளது