நாடு முழுவதும் தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாத் தலங்களை நாளை முதல் திறப்பதற்கு மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
கொரோனா தாக்கம் மற்றும் ஊரடங்கால் மத்திய தொல்லியல் துறையால் பராமரிக்கப்படும் 3,691 நினைவுச் சின்னங்கள், தொல்லியல் சிறப்பு வாய்ந்த இடங்கள் கடந்த மார்ச் 17ம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன.
தற்போது அமலில் உள்ள 5ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த சுற்றுலாத் தலங்களையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை தெரிவித்துள்ள மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் பிரகலாத் படேல், சுகாதாரத் துறையால் வழங்கப்பட்டுள்ள அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளும் பின்பற்றப்படும் என கூறியுள்ளார்.
முகக்கவசம் அணிதலும், மின்னணு டிக்கெட் முறையும் கட்டாயமாக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.