வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்தப் பூச்சிக்கொல்லி தெளிக்கும் பணியில் விமானப்படை ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன.
பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்கு படையெடுத்து வந்த வெட்டுக்கிளிக் கூட்டங்கள் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான எக்டேர் பரப்பில் பயிர்களைத் தின்று அழித்துள்ளன.
இதனால் டிரோன், ஹெலிகாப்டர் ஆகியவற்றின் மூலம் பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்க விமானப் போக்குவரத்து அமைச்சகம் அனுமதி அளித்தது.
இதையடுத்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து அதிகத் திறனுள்ள தெளிப்பான்களை மத்திய வேளாண்மை அமைச்சகம் இறக்குமதி செய்துள்ளது.
இவற்றை விமானப்படையின் எம்ஐ 17 வகையைச் சேர்ந்த 5 ஹெலிகாப்டர்களில் பொருத்திப் பூச்சிக்கொல்லி தெளிக்கும் பணியில் ஈடுபடுத்த உள்ளது.
இதேபோல் 5 டிரோன் நிறுவனங்களும் பூச்சிக் கொல்லி தெளிக்கும் பணியை வரும் வாரத்தில் தொடங்க உள்ளன.