ஜூலை மாதத்தில் வெட்டுக்கிளிக் கூட்டத்தின் மற்றொரு படையெடுப்பை இந்தியா எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என உணவு மற்றும் வேளாண் அமைப்பு எச்சரித்துள்ளது.
கிழக்கு ஆப்பிரிக்காவில் கடந்த ஆண்டு இறுதியில் பல்கிப் பெருகிய வெட்டுக்கிளிக் கூட்டம் அங்கிருந்து அரேபியப் பாலைவனத்துக்கு வந்து பாகிஸ்தான் வழியாக மே மாதத்தில் இந்தியாவுக்குப் படையெடுத்து வந்தது.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட மாநிலங்களில் பல்லாயிரக்கணக்கான எக்டேர் பரப்பில் உள்ள பயிர்கள் வெட்டுக்கிளிப் படையெடுப்பால் சேதமடைந்துள்ளன.
இந்நிலையில் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளிலும், ஈரானிலும் வளர்ந்துவரும் இரண்டாம் தலைமுறை வெட்டுக்கிளிகள் கூட்டம் ஜூன், ஜூலை மாதங்களில் ராஜஸ்தான் பாலைவனத்துக்கு அலைஅலையாகப் படையெடுத்து வரும் என ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு எச்சரித்துள்ளது. இது குறித்து ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 16 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.