விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க ஒரே நாடு ஒரே சந்தை எனும் நோக்கில், மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்த 3 அவசரச் சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
விவசாயிகள் நேரடியாக தங்களது உற்பத்தி பொருட்களை வெளிமநிலங்களில் விற்கவும், முன்கூட்டியே விலையை நிர்ணயித்து ஒப்பந்தங்களை மேற்கொண்டு மொத்த வியாபாரிகளுக்கு ஏற்றுமதி செய்யவும், அத்தியாவசிய பொருட்களின் பட்டியலில் இருந்து வெங்காயம், உருளைக் கிழங்கு மற்றும் எண்ணெய் வித்துக்கள் போன்றவற்றை நீக்கவும் மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்து இருந்தது.
இதையடுத்து, இந்த தீர்மானம் குடியரசுத் தலைவர் ரம்நாத் கோவிந்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட நிலையில், 3 அவசரச் சட்டங்களுக்கும் அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.