மும்பையில் 70 நாட்களுக்குப் பின் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு அனைத்து பகுதிகளுக்கு மக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
மும்பையில் கால்டாக்சிகளும், புறநகரில் ஆட்டோக்களும் ஓடத் தொடங்கின. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், சுற்றுலாப் பயணிகள், வியாபார நிமித்தமாக வந்தவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச்செல்ல பேருந்துகளை இயக்குவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கடைகளை சுழற்சி முறையில் திறக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. தனிநபர் இடைவெளியை கடைபிடிக்கவும் அதனை காவல்துறையினர் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருக்கும் நிலையில், இயல்பு வாழ்க்கையை நோக்கி மும்பை அடியெடுத்து வைத்துள்ளது.