ஓடிசாவின் 11 மாவட்டங்களில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர ஜூன் மாதத்தில் வாரம் தோறும் 2 நாள்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு 5ம் கட்டமாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய தடுப்பு நடவடிக்கைக்கு மத்தியிலும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்தபடியே உள்ளது. இதை கருத்தில் கொண்டு, 11 மாவட்டங்களிலும் ஜூன் மாதத்தில் வார இறுதிநாள்களான சனி, ஞாயிறு ஆகிய 2 நாள்கள் வீதம் மொத்தம் 8 நாள்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
பொதுமக்கள் வெளியில் நடமாடுவதை கட்டுப்படுத்தவே, இந்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகவும், ஆதலால் வார இறுதிநாள்களில் மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும், வெளியே வரக் கூடாது எனவும் நவீன் பட்நாயக் கேட்டுக் கொண்டுள்ளார்.