கொரோனா காற்றின் மூலமாகவும் பரவுவதை அண்மையில் நடைபெற்ற ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
ஒருவர் பேசும் போதும் இருமும் போதும் தெறிக்கும் எச்சில் துளிகள், பாதிக்கப்பட்ட நபருடன் நேருக்கு நேராக தொடர்பில் இருப்பது, தொற்று பரவிய பொருட்களைத் தொடுவது போன்றவற்றால்தான் கொரோனா பரவுகிறது என்று அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கலிபோர்னியாவின் கிம்பர்லி பிராத்தர் தலைமையிலான விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வின் முடிவுகள் அச்சிடப்பட்டுள்ளன. இதில் கொரோனா வைரஸ் தொற்று அறிகுறி இல்லாத நபர்களின் மூலமாக காற்றில் அதிக அளவு பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றில் சுமார் 3 மணி நேரம் வரை தொற்றுக் கிருமிகள் நீடித்திருக்க முடியும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.