கொரோனா பரவல் அதிகமிருப்பதை சுட்டிக்காட்டி, 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வுகளை ஒத்திவைக்கும்படி சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ (CBSE, ICSE boards) வாரியங்களை மகாராஷ்டிரா அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தப்பட்ட அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட 10, 12ம் வகுப்பு தேர்வுகளை ஜூலை மாதம் நடத்த அந்த வாரியங்கள் திட்டமிட்டுள்ளன. மகாராஷ்டிராவில் ஏற்கெனவே கொரோனா பரவல் உச்சநிலையில் இருப்பதால், இத்தேர்வுகளுக்கு வரும் மாணவர்களும் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக மாநில அரசு கருதுகிறது.
ஆதலால் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ ஆகியவற்றுக்கு மாநில அரசு கடிதம் எழுதியுள்ளது. அதில் தேர்வுகள் நடத்த அனுமதியளிக்க முடியாத நிலையில் அரசு இருப்பதாகவும், ஆதலால் தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.