கொரோனா தீ நுண்கிருமி வேகமாக பரவி வரும் சூழ்நிலையால், அவசர சிகிச்சைக்கான தற்காலிக மருத்துவமனைகள் அமைப்பது முக்கியப் பணியாக இருப்பதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரேநாளில் 260 பேர் உயிரிழந்ததால் உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தைத் தாண்டியது.
தொடர்ந்து 5 நாட்களாக தினந்தோறும் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சூழலில் இந்த எண்ணிக்கைப் பெருக்கை சமாளிக்க கூடுதலான தற்காலிக மருத்துவமனைகளை அமைப்பது முக்கியம் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பு தொடர்பான மனுவுக்கு எழுத்துப் பூர்வமான பதில் மனுவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது.
அதில் மருத்துவமனை ஊழியர்கள் உட்பட அனைவரும் தங்கள் பாதுகாப்பை தாங்களாகவே உறுதி செய்துக் கொள்ள வேண்டும் என்றும் வழிகாட்டல்களை கறாராக பின்பற்ற வேண்டும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.