ராணுவ தளங்களை பயன்படுத்துவது உள்ளிட்ட 7 முக்கிய ஒப்பந்தங்கள் இந்தியா - ஆஸ்திரேலியா இடையே கையெழுத்தாகி உள்ளன.
இரு நாடுகளுக்கு இடையிலான வருடாந்திர மாநாடு ஆன்லைன் முறையில் நடைபெற்றது. பிரதமர் நரேந்திரமோடி ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசனுடன் காணொலி முறையில் கலந்துரையாடினார்.
அப்போது பேசிய மோடி, இந்தியாவில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பாதிப்பை ஒரு வாய்ப்பாக பார்ப்பதாகவும், அனைத்து துறைகளிலும் விரிவான சீர்திருத்த நடவடிக்கைகள் தொடங்கி இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
கொரோனா பெருந்தொற்றால் பொருளாதாரம் மற்றும் சமூகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த, கூட்டு அணுகுமுறை அவசியம் என்றும் தெரிவித்தார்.
இரு நாடுகளிடையே 7 ஒப்பந்தகள் கையெழுத்தாகின. குறிப்பாக ராணுவ தளவாடங்களை கையாளும் போது இருநாட்டு ராணுவ தளங்களை பயன்படுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இது, ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சீனாவை எதிர்கொள்ள உதவும் என பார்க்கப்படுகிறது.i