இந்தியாவின் பாதுகாப்புத்துறை செயலாளர் அஜய் குமாருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஊரடங்கு காரணமாக வீடியோ கான்பிரன்சிங் மூலம் மட்டுமே ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்று வந்த நிலையில், அவருக்கு நோய்த்தொற்று உறுதியாகி இருப்பது பாதுகாப்புத்துறை அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதைதொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவருடன் நேரடி தொடர்பில் இருந்த சுமார் 30 பேரை தனிமைப்படுத்திக் கொள்ள வலியுறுத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று அலுவலகம் செல்லவில்லை எனவும், அதே சமயம் அவர் தனிமைப்படுத்தப்படவில்லை எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.