விசாகப்பட்டினம் ஆலையில் கடந்த 7 ஆம் தேதி ஏற்பட்ட விஷவாயு விபத்தில் ஏற்பட்ட இறப்புகளுக்கு, ஆலையின் உரிமையாளரான எல்ஜிபி (LGP) நிறுவனமே ஒட்டுமொத்த பொறுப்பையும் ஏற்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
இந்த விபத்தில் 11 பேர் உயிரழந்ததுடன், நூற்றுக்கணக்கானோர் பலவிதமான உடல் உபாதைகளுக்கு ஆளாகினர். விபத்து குறித்து தானாக முன்வந்து விசாரணை நடத்தும் பசுமை தீர்ப்பாயம், கடந்த 8 ஆம் தேதி விதிக்கப்பட்ட 50 கோடி ரூபாய் அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும் என்ற எல்ஜிபி.யின் (LGP) வேண்டுகோளை நிராகரித்துள்ளது.
அந்த தொகையை, விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும், சுற்றுச்சூழல் சீரமைப்பு நடவடிக்கைகளுக்கும் உடனே வழங்குமாறு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.