கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உலக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் குறைவாகத் தான் இருக்கிறது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகில் கொரோனாவால் இறந்தவர்கள் விகிதம் 6 புள்ளி 13 ஆக இருக்கையில் இந்தியாவின் இறப்பு விகிதம் 2 புள்ளி 82 சதவீதமாக உள்ளது. அதிலும் 60 வயதுக்கு மேற்பட்டோர், ஏற்கனவே பல்வேறு நோய்களைக் கொண்டவர்கள் தாம் அதிக அளவில் உயிரிழந்ததாகவும் சுகாதாரத்துறை வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
75 வயதுக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் மரணங்களுக்கு ஆளாகின்றனர். இது இறப்பு விகிதத்தில் 12 சதவீதமாகும்.
மிகப்பெரிய ஜனத்தொகை கொண்ட இந்தியாவில் பாதிப்பு விகிதம் உலகிலேயே மிகவும் குறைந்த அளவுதான் என்றும் சராசரியாக ஒருநாளுக்கு ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்படுவதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.