கொரோனா பாதிப்பில் இந்தியா உலகில் 7 ஆவது இடத்தில் உள்ளது என வெளியாகும் செய்திகள் தவறானவை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
நமது மக்கள் தொகையை வைத்து கணக்கிடும் போது இது தெரிய வரும் என தெரிவித்துள்ள மத்திய சுகாதார அமைச்சகம், இந்தியாவின் மொத்த மக்கள் தொகைக்கு ஈடான 14 நாடுகளில் தொற்று நம்மை விடவும் 22.5 சதவிகிதமும், இறப்பு 55.2 சதவிகிதமும் அதிகமாக இருப்பதாக கூறியுள்ளது.
அதே போன்று கொரோனாவில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கை கடந்த ஏப்ரலில் 11.42 சதவிகிதமாக இருந்தது இப்போது 48.07 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது.