கொரோனாவை தடுப்பதிலும், ஒழிப்பதிலும் தீரத்துடன் போராடும் மருத்துவர்களுக்கு அடிப்படை பயணக்கட்டணம் இல்லாமல் 50 ஆயிரம் ஒரு வழி பயணத்திற்கான டிக்கெட்டுகளை வழங்க ஏர் ஏசியா விமான நிறுவனம் முன்வந்துள்ளது.
கொரோனா ஒழிப்புக்கு பாடுபடும் மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இதை செய்வதாக ஏர் ஏசியா இந்தியாவின் தலைமை வர்த்தக அதிகாரி அங்கூர் கார்க் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30 வரை இந்த சலுகையுடன் பயணிக்கலாம் எனவும், இதற்காக வரும் 12 ஆம் தேதிக்கு முன்னர் உரிய அடையாள ஆவணங்களுடன் பதிவு செய்ய வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட்டில் அடிப்படைக் கட்டணம் மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும் விமான நிலைய கட்டணங்கள், இதர வரிகள் போன்றவற்றை செலுத்த வேண்டும் எனவும் ஏர் ஏசியா தெரிவித்துள்ளது.