பிரதமர் மோடியின் தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்று, ஓராண்டு முடிந்தபின்னர் நடக்கும் இந்த முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தில் பலமுக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
நாடு முழுவதிலும் ஊரடங்கை 3 கட்டங்களாக விலக்குவதற்கான காலகட்டத்தின் முதல் நாளான இன்று, அது தொடர்பான விஷயங்கள் முக்கிய ஆலோசனைப் பொருளாக இருந்திருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமரின் சுயசார்புத் திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள 20 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கான பொருளாதார நிவாரண நிதித் திட்டத்தில், சுற்றுலா, ஹோட்டல் உள்ளிட்ட துறைகளுக்கு கூடுதல் நிதி உதவி செய்வது குறித்த முடிவுகளும் இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.