சத்தீஸ்கர் - ஒடிசா மாநில எல்லையில் மாவோயிஸ்டுகள் அமைத்திருந்த ஆயுத தொழிற்சாலையை போலீசார் அழித்தனர்.
சுக்மா மாவட்டத்தில் உள்ள கிராமப்பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் துப்பாக்கி தயாரித்து வருவதாக பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து மல்கன்கிரி என்ற இடத்தில் என்ற இடத்தில் ரகசியமாக செயல்பட்டு வந்த ஆயுதத் தொழிற்சாலையை கண்டுபிடித்து அழித்தனர்.
மேலும் அப்பகுதியில் பதுங்கியிருந்த மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த மாத்வி ஜோகா என்பவரையும் பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். இவரது தலைக்கு போலீசார் ஏற்கனவே 5 லட்சம் ரூபாய் வெகுமதி அறிவித்திருந்தனர். துப்பாக்கித் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள், தோட்டாக்கள் ஆகியவற்றையும் பாதுகாப்புப் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.