சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் சூரியமின் உற்பத்தித் துறையில் தடம் பதிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கேட்டுக் கொண்டார்.
புனேவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மாநில அரசுகள் மின்பகிர்மான கட்டணங்களை குறைத்தால் மட்டுமே, சிறு,குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் சூரியமின் உற்பத்தியில் ஈடுபட முடியும் என்றார். பொதுமுடக்கத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளில் இருந்து மீள்வதற்காக, சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 3 லட்சம் கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார். இதனைப் பெறுவதில் சிக்கல் ஏதும் ஏற்பட்டால் சிறு தொழில் நிறுவனங்கள் நேரடியாக மின்னஞ்சலில் புகார் தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.