உச்சம் எட்டி வரும் கொரோனாவால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 85 ஆயிரத்தை தாண்டி விட்டது. அதேநேரம், கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 87 ஆயிரம் பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.
உலக நாடுகளை உலுக்கும் கொரோனா, இந்தியாவில் புதிய உச்சத்தை எட்டிஉள்ளது.
மஹாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு, 65 ஆயிரத்தை கடந்து விட்டது. அங்கு ஒரே நாளில் மட்டும் காவலர்கள் 91 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது.
மஹாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக 2 - வது இடம் வகிக்கும் தமிழகம் , கொரோனா வரலாற்றில் புதிய மைல் கல்லை பதிவு செய்துள்ளது. அதாவது, முதன் முதலாக ஒரே நாளில் ஆயிரம் பேருக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 295 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.
குஜராத்தில் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டி விட்டது.
ராஜஸ்தானில் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 600 - ஐ தாண்ட, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசத்தில் தலா 8 ஆயிரத்தை எட்டும் அளவில் உயர்ந்து வருகிறது.
மேற்கு வங்காளம், ஆந்திரா, பீஹார், கர்நாடகா, பஞ்சாப் மற்றும் தெலங்கானாவில் கொரோனா பாதிப்பு கணிசமாக உயர்ந்துள்ளது. இதுதவிர, ஜம்மு - காஷ்மீர், ஒடிசா, ஹரியானாவிலும், வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில், ஆயிரத்து 380 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 85 ஆயிரத்தை தாண்டி விட்டது.
கொரோனா உயிர்ப்பலி, 5 ஆயிரத்து 249 ஆக உயர்ந்துள்ளது. இதனிடையே,கொரோனா சிகிச்சை முடிந்து, இதுவரை சுமார் 87 ஆயிரம் பேர், டிஸ்சார்ஜ் செய்யப் பட்டு, வீடு திரும்பி உள்ளனர்.