கொரோனா வைரசுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்தக் கூடிய தடுப்பூசி ஆய்வுகள் நாட்டின் 3 இடங்களில் நடப்பதாகவும், அவற்றின் முடிவுகள் இன்னும் 15 நாட்களில் தெரியும் எனவும் ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
இது தவிர மோனோகுளோனல் ஆன்டிபாடீஸ் உருவாக்குவதற்கான ஆய்வுகள் புனே மற்றும் இந்தூரிலும், பிளாஸ்மா தெரபி ஆய்வு கொல்கத்தாவிலும் நடப்பதாக ஐசிஎம்ஆர் தலைமை இயக்குநர் சேகர் மண்டே தெரிவித்துள்ளார்.
கொரோனாவை கட்டுப்படுத்த, ஹெர்டு இம்யூனிட்டி எனப்படும் சமுதாய எதிர்ப்புத் திறன் உருவாகும் வரை காத்திருப்பது இந்தியா போன்ற மிகப் பெரிய நாட்டுக்கு ஆபத்தாக மாறி விடும் என கூறியுள்ள அவர், தொற்று பரவுவதே தடுப்பதே இந்தியாவுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.