ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க பணம் இல்லை என்பதால் உடனடியாக 5 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி செய்யுமாறு, மத்திய அரசை டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா கேட்டுக் கொண்டுள்ளார்.
கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கால் அரசுக்கு வர வேண்டிய வருவாய் 85 சதவிகிதம் முடங்கி விட்டதால், மத்திய அரசின் நிதியுதவியை எதிர்பார்ப்பதாக, நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு அனுப்பிய கடிதத்தில் மணீஷ் சிசோடியா விளக்கம் அளித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் இதர நிர்வாக செலவினங்களுக்காக மாதம் தோறும் 3500 கோடி ரூபாய் தேவைப்படுவதாகவும், கடந்த 2 மாதங்களாக ஜிஎஸ்டி வரியாக டெல்லி அரசுக்கு 1000 கோடி மட்டுமே கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
class="twitter-tweet">मैंने केंद्रीय वित्त मंत्री को चिट्ठी लिखकर दिल्ली के लिए 5 हज़ार करोड़ रुपए की राशि की माँग की है.
कोरोना व लॉकडाउन की वजह से दिल्ली सरकार का टैक्स कलेक्शन क़रीब 85% नीचे चल रहा है. केंद्र की ओर से बाक़ी राज्यों को जारी आपदा राहत कोष से भी कोई राशि दिल्ली को नहीं मिली है.