உத்தரப்பிரதேசத்தில் ஷ்ராமிக் சிறப்பு ரயிலில் பயணித்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை நோக்கி ரயில்வே அதிகாரி ஒருவர் பிஸ்கெட் பாக்கெட்டுகளை தூக்கி வீசிய வீடியோ வைரலாகி வருகிறது.
உத்தரப்பிரதேச மாநிலம், ஃபிரோசாபாத்திலுள்ள ரயில்நிலையம் வழியாக சென்ற சிறப்பு ரயிலில் ஏராளமானோர் பயணித்தனர்.
அதிலிருந்தோருக்கு ரயில்வே அதிகாரி ஒருவர், சிறிது தூரத்தில் இருந்து பிஸ்கெட் பாக்கெட்டுகளை தூக்கி வீசினார். ரயிலில் இருந்தவர்கள் கூடுதலாக பிஸ்கெட்டுகள் கேட்டபோது, அவமதிக்கும் வகையிலும் அவர் பேசியதாக புகார் எழுந்துள்ளது.
அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் எடுத்த வீடியோ, ரயில்வே அதிகாரியின் வாட்ஸ் அப் குழு மூலம் பிற சமூகவலைதளங்களில் பரவியது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரி பணியிடை நீக்கம் என சம்மந்தப்பட்டவர்கள் மீது துறைரீதியிலான நடவடிக்கையை ரயில்வே எடுத்துள்ளது.