கொரோனாவைக் கட்டுப்படுத்த நிரந்தர முழு அடைப்பே தீர்வாகாது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
காணொலியில் பேசிய அவர், கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதை ஒப்புக் கொள்வதாகவும், அதே நேரத்தில் மக்கள் அச்சப்படத் தேவையில்லை எனவும் தெரிவித்தார். கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு அதிகரித்தாலும், மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லையென்றாலும் தான் கவலைப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
கொரோனாவைக் கட்டுப்படுத்த நிரந்தர முழு அடைப்பே தீர்வாகாது என்பதால், அனைத்து முன்னெச்சரிக்கைகளுடன் வாழ்க்கை முறையை முன்னெடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க டெல்லி மருத்துவமனைகளில் 6,600 படுக்கை வசதி செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்த வாரத்தில் இவற்றை, 9,500 படுக்கைகளாக அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்தார்.