பாகிஸ்தான் உளவு பணிக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில், ஜம்மு-காஷ்மீரில் பிடிபட்ட புறா, இன்று விடுவிக்கப்பட்டது.
எல்லை கட்டுப்பாடு கோடு பகுதியையொட்டிய வீட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அந்த புறா பிடிபட்டது. புறாவின் இறக்கையில் இளம்சிவப்பு அடையாளமும், காலில் இருந்த வளையத்தில் சில எண்களும் இருந்ததால், பாகிஸ்தானின் உளவு வேலைக்கு பயன்படுத்தப்பட்டிக்கலாம் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவந்த நிலையில் பாகிஸ்தானை சேர்ந்த கிராமவாசி ஒருவர், அது பந்தய புறா என்றும், அந்த எண் தனது செல்போன் என்றும் தெரிவித்து, அதை விடுவிக்க கோரிக்கை விடுத்தார். இதையடுத்து அந்த புறாவை, அது முன்பு பிடிபட்ட இடத்திலேயே கொண்டு சென்று போலீசார் வியாழக்கிழமை விடுவித்தனர்.