வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் நகர்ப்புறங்களுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்பதோடு, அவை மனிதர்களை தாக்காது என, ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு கூறியுள்ளது.
ராஜஸ்தானில் ஜூலை வரை, அடுத்தடுத்து அலை அலையாக வெட்டுக்கிளிகள் படையெடுப்பு இருக்கலாம் என்று ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பு கூறியுள்ளது.
வடஇந்திய பகுதியில் பீகார் மற்றும் ஒடிசா வரை அதன் நகர்வுகள் இருக்கலாம் என்றும் பருவமழைக் காலத்தில் காற்றின் போக்கில் ஏற்படும் மாறுதலை ஒட்டி மீண்டும் ராஜஸ்தானுக்கு பின்வாங்கலாம் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஐ.நா.
உணவு மற்றும் வேளாண் அமைப்பின் அறிவிப்பை மேற்கோள் காட்டி, வெட்டுக் கிளிகள் படையெடுப்பு தென்னிந்தியாவிற்கோ நேபாளம் வங்கதேசத்திற்கோ செல்ல வாய்ப்பில்லை என மத்திய வேளாண்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.
உணவு ஏதும் கிடைக்காது என்பதால், வெட்டுக்கிளிக் கூட்டம் டெல்லி போன்ற நகர்ப்புறங்களை விரும்புவது இல்லை என்றும், அவை நகர்ப்புறங்களின் மேலாக பறந்து கடந்து சென்றுவிடும் என்றும் ஐ.நா. உணவு மற்றும் வேளாண் அமைப்பின் அதிகாரி கெய்த் கிரஸ்மேன் தெரிவித்துள்ளார்.