இந்தியாவில் விரைவில் 11 எண்களை கொண்ட செல்போன் எண் நடைமுறைக்கு வரவுள்ளது.
தற்போது 10 எண்களை கொண்ட செல்போன் எண் பயனில் உள்ளது. மாநிலம் விட்டு வேறு மாநிலம் சென்றால் மட்டும் பூஜ்யம் என்ற எண்ணை கூடுதலாக சேர்த்து அழைக்கும் நடைமுறை உள்ளது. இந்நிலையில், புதிய செல்போன் எண்ணுக்கான தேவை அதிகரிப்பை கருத்தில் கொண்டு,பல்வேறு தரப்பினரிடம் கருத்துகளை கேட்டறிந்த டிராய் அமைப்பு, செல்போன் எண்ணை 11ஆக்க முடிவு செய்து, நிரந்தரமாக 9 என்ற எண்ணை செல் எண் முன்பு கூடுதலாக சேர்க்க பரிந்துரைத்துள்ளது.
இதனால் புதிதாக கோடிகணக்கில் (ஆயிரம் கோடி) செல்போன் எண்களை ஒதுக்க முடியும் என டிராய் அமைப்பு நினைக்கிறது. இதேபோல் டாங்கில் எண்ணை 10 லிருந்து 13ஆக அதிகரிக்க டிராய் அமைப்பு பரிந்துரைத்துள்ளது.