பெண் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கொரோனா நோயாளிகளைக் கையாளும்போது தாங்கள் அணிந்திருக்கும் சேலையின் மீது அணியக்கூடிய புதுவகை கவச உடையை சூரத் நிறுவனம் வடிவமைத்துள்ளது.
ஏற்கனவே கைத்தறி ஆடையில் முகக் கவசம் தயாரித்து வழிகாட்டியாக திகழும் சூரத் ஜவுளித் தொழில் இப்போது இந்த புதுவகை கவச ஆடையை உலகிற்கு அளித்துள்ளது.
பெண் மருத்துவர்கள் இதனை அப்படியே அழகாக தங்கள் ஆடைகளின் மேலேயே அணிந்துக் கொள்ளலாம். கேரள அரசு பெண்கள் புடவை கட்டி பணியாற்ற முடியாது என்பதால் சட்டை டிசர்ட் போன்றவற்றை அணிந்து வருமாறு அறிவுறுத்தியுள்ளது. இப்போது புடவையைக் கட்டிக் கொண்டும் பெண் பணியாளர்கள், மருத்துவர்கள் பணியாற்ற இந்த ஆடை வகை செய்கிறது.