புனே கோரேகாவன் தலித் போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தெலுங்கு கவிஞர் வரா வர ராவ் மகாராஷ்ட்ராவின் தாலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் உடல் நலக் குறைவால் மயக்கநிலை அடைந்து, புனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
81 வயதாகும் வரா வர ராவுக்கு ஜாமீன் வழங்கக் கோரி அவருடைய குடும்பத்தினர் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கும் மும்பை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கும் கடிதம் எழுதியுள்ளனர். வராவர ராவின் மூன்று மகள்கள் எழுதிய கடிதத்தில், சிறைகளில் கொரோனா பரவல் காரணமாக மிகவும் அதிக ஆபத்தான நிலையில் இருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கும்படி கோரியுள்ளனர்.