வங்கதேசத்தில் செயல்படும் ஜமாத் உல் முஜாஹிதீன் (Jamaat-ul-Mujahideen ) பயங்கரவாத அமைப்பின் கமாண்டரான அப்துல் கரீமை கொல்கத்தா போலீசார் கைது செய்துள்ளனர்.
அந்த அமைப்பின் தலைவரான சலாஹூதின் சலேகின், முர்ஷிதாபாத் மாவட்டத்தில் அண்மையில் கைது செய்யப்பட்டான். இதையடுத்து அப்துல் கரீமையும், அதே மாவட்டத்தில் கொல்கத்தா சிறப்பு அதிரடிப் படை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 2018ம் ஆண்டு அப்பகுதியில் மறைந்திருந்த அவன், போலீசாரின் பிடியில் சிக்காமல் கடைசி நேரத்தில் தப்பினான். ஆனால் தற்போது கொல்கத்தா போலீசாரிடம் அவன் வகையாக சிக்கிக் கொண்டான். பீகாரின் புத்தகயா, மேற்குவங்கம் பர்துவான் ஆகிய இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளின் பின்னணியில் ஜமாத் உல் முஜாஹிதீன் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கரீம் கைதின் மூலம் அந்த குண்டுவெடிப்புகள் குறித்து புதிய தகவல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.