டெல்லி-குர்கான் எல்லை மூடப்பட்டதை கண்டித்து அவ்வழியே செல்லும் நூற்றுகணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
டெல்லியில் கொரோனா பரவல் அதிகரித்திருப்பதாலும், அங்கிருந்து ஹரியானாவுக்கு வருவோரால் தொற்று ஏற்படுவதை கருத்தில் கொண்டும், டெல்லியுடனான அனைத்து வழிகளையும் சீலிட ஹரியானா அரசு முடிவு செய்தது. இதன்படி டெல்லி-குர்காண் இடையேயான எல்லை இன்று காலை மூடப்பட்டிருந்தது.
இருப்பினும் கார்களுக்கு மட்டும் அனுமதியளித்து, சைக்கிள்களில் செல்வோர், நடந்து செல்வோருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதை கண்டித்து நூற்றுகணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தைத் தொடர்ந்து, அந்த எல்லைபகுதி யாரும் செல்ல முடியாத வரையில் மூடப்பட்டது. அத்தியாவசிய சேவைகளில் ஈடுபட்டிருப்போரின் வாகனங்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டது.