உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள 67 விவசாய நிலங்களில் வெட்டுக்கிளிகள் பல்லாயிரக்கணக்கில் படையெடுத்துள்ளன.
அங்கு பயிரிடப்பட்டுள்ள காய்கறிகள், பருப்பு பயிர்கள், மாமரங்கள் போன்றவற்றை வெட்டுக்கிளிகள் சேதம் செய்து வருகின்றன. வெட்டுக்கிளிகளை விரட்டவும் ஒழிக்கவும் பூச்சிக் கொல்லி மருந்துகளை அதிகாரிகள் தெளித்து வரும் போதும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அவை பெருகி வருகின்றன.
மத்தியப் பிரதேச மாநிலம் சினோர் பகுதியில் இருந்து இந்த வெட்டுக் கிளிகள் குவாலியர் எல்லை வழியாக ஜான்சிக்குள் நுழைந்துள்ளன. வெட்டுக் கிளிகளுக்கு மருந்து தெளிக்கும் பணியில் இருமாநிலங்களும் கூட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.