ஹரியானா அரசு தனது எல்லைகளை மூடி சீல் வைத்துள்ளது. டெல்லியில் இருந்து அனுமதி அட்டை இல்லாதவர்கள் வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்களை ஏற்றி வரும் சரக்கு வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு இதர வாகனங்கள் எல்லையில் நிறுத்தப்படுவதால் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் போன்ற சிறப்பு அனுமதி பெற்றவர்களுக்கு மட்டுமே எல்லையில் தடுப்புகள் நீக்கப்படுகின்றன. டெல்லியில் இருந்து வருவோரோல் கொரோனா பரவுவதால் இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஹரியானா அமைச்சர் அனில் விஜ் தெரிவித்தார்.
இதனிடையே இதேபோன்று டெல்லியின் மற்றொரு அண்டை மாநிலமான உத்தரப்பிரதேசமும் நொய்டா எல்லையை மூடி சீல் வைத்துள்ளது.அவசியமான பணிகளுக்கு செல்வோர் மட்டும் சிறப்பு அனுமதி பெற்று அனுமதிக்கப்படுகின்றனர்.