காலாபானியில் இருந்து இந்தியா தனது படைகளை வாபஸ் பெற வேண்டும் என்ற நேபாளம் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்திய நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த நேபாள வெளியுறவு அமைச்சர் பிரதீப் குமார் கியாவாலி, இரு நாடுகளுக்கு இடையே உள்ள எல்லைப் பிரச்சனைக்கு அவசரமாக தீர்வு காண வேண்டும் என கூறியுள்ளார். அதன் முதற்கட்டமாக காலாபானியில் இருந்து இந்திய படைகள் வாபஸ் பெறப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனிடையே காலாபானி குறித்த பிரச்சனையை, கொரோனா காலகட்டத்திற்குப் பிறகு விவாதிக்கலாம் என மத்திய அரசு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.