மத்திய பிரதேசத்தில் வீட்டில் தனிமைபடுத்துதல் விதியை மீறுவோருக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.
நாட்டில் கொரோனா அதிகம் பாதித்த முதல் 10 மாநிலங்களின் பட்டியலில் மத்திய பிரதேசமும் உள்ளது.
அந்த மாநிலத்தில் மத்திய அரசு வழிகாட்டுதல்படி, கொரோனா பாதிப்பு லேசாக இருப்போரும், அறிகுறி சந்தேகம் இருப்போரும் வீட்டில் தனிமைபடுத்தப்பட்டு வருகின்றனர்.
ஆனால் இதுபோல தனிமைபடுத்தப்பட்டோர் விதியை மீறி, சுற்றி திரிவது போன்ற செயல்களில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு முடிவு கட்டும் வகையில், தனிமைபடுத்துதல் விதியை முதன்முறையாக மீறுவோருக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கவும், 2ஆவது முறையாக மீறினால் வீட்டில் இருந்து தனிமை முகாமுக்கு மாற்றும் நடவடிக்கையை எடுக்கவும் மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.