கொல்கத்தா விமான நிலையத்தில் 2 மாதக்காலத்துக்குப் பின் இன்று உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
நான்காம் கட்ட ஊரடங்கில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதால் கடந்த 25ஆம் தேதி முதல் நாட்டின் முதன்மையான நகரங்கள் இடையே விமானப் போக்குவரத்து தொடங்கி நடைபெற்று வருகிறது.
அம்பன் புயலால் பாதிப்புக்குள்ளான கொல்கத்தாவில் சீரமைப்புப் பணிகளையும், பயணிகள் சமூக விலகலைக் கடைப்பிடிப்பதற்கான முன்னேற்பாடுகளையும் செய்வதற்குக் கூடுதல் காலம் தேவைப்பட்டது. இதையடுத்துக் கொல்கத்தா சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் இன்று முதல் உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
பயணிகள் அனைவரும் சமூக விலகலைக் கடைப்பிடித்து வெப்பநிலை கண்டறியும் சோதனைக்குப் பின்னரே விமான நிலையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.