கல்வி நிறுவனங்கள் கட்டணம் வசூலிப்பதில் மாணவர்களை நிர்பந்திக்காமல் செயல்பட வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு அறிவுறுத்தி உள்ளது.
ஆண்டு மற்றும் செமஸ்டர் கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம் உள்ளிட்டவற்றை உடனடியாக செலுத்த பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் வற்புறுத்துவதாக பல்வேறு புகார்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக யூ.ஜி.சி.தெரிவித்துள்ளது.
இதன் பொருட்டு, ஊடரங்கு காரணமாக ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை கருத்தில் கொண்டு, கட்டண நடைமுறையை அணுக கல்வி நிறுவனங்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. இயல்பு நிலைக்கு திரும்பும் வரையில் மாற்று கட்டண விருப்பங்கள் மற்றும் மாணவர்களின் தனிப்பட்ட கோரிக்கையை சாத்தியம் இருந்தால் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் பரிசீலிக்கலாம் என்றும் யூ.ஜி.சி. அறிவுறுத்தி உள்ளது.