புதிய வரைபடத்தில் இந்தியாவின் சில பகுதிகளை உள்ளடக்கிய நேபாளத்திற்கு இந்தியா கடும் கண்டனத்தைத் தெரிவித்ததையடுத்து அந்த வரைபடத்தை வெளியிடும் திட்டத்தை அந்நாட்டு அரசு ஒத்தி வைத்துள்ளது.
தங்கள் நாட்டில் கொரோனா பரவ இந்தியா தான் காரணம் என்று நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒளி பழிசுமத்தியதையடுத்து இருநாடுகளுக்கும் இடையே பனிப்போர் வெடித்தது. கடந்த வாரம் அந்நாடு வெளியிட்ட புதிய வரைபடத்தில் இந்தியாவின் மலைப்பகுதிகள், நிலப்பரப்புகள் நேபாளத்துக்கு சொந்தமானவை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு இந்தியாவின் தரப்பில் இருந்து கடும் ஆட்சேபம் எழுப்பப்பட்டது.காளி நதிக்கு இருபுறம் உள்ள பகுதிகளை இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடி வருவதாக நேபாளம் அளித்த விளக்கத்தை இந்தியா ஏற்கவில்லை. இதனையடுத்து இந்தியாவின் பலத்த எதிர்ப்பின் காரணமாக தற்காலிகமாக அந்த வரைபடத்தை வெளியிடும் முடிவை நேபாள அரசு நிறுத்தி வைத்துள்ளது.
class="twitter-tweet">#Nepal postpones scheduled discussion on constitutional amendment to update map https://t.co/tCdcmyQqWF
— National Herald (@NH_India) May 27, 2020