ஜம்மு-காஷ்மீரில் கொரோனா பரவலால் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதியில் இருந்து வந்த காரணத்தால் குதிரை ஒன்று தனிமைபடுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் பகுதி சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
சோபியான் மாவட்டத்தில் உள்ள அத்தகைய சிவப்பு மண்டல பகுதியில் இருந்து குதிரையும், அதன் உரிமையாளரும் ரஜெளரி மாவட்டத்துக்கு அண்மையில் வந்தனர்.
இதுகுறித்த தகவலின்பேரில் உரிமையாளரையும், குதிரையையும் அதிகாரிகள் தனிமைபடுத்தியுள்ளனர். குதிரையின் உரிமையாளரிடம் ரத்தம், சளி ஆகியவை பரிசோதனைக்கு சேகரிக்கப்பட்டுள்ளது.