வடமாநிலங்களில் விவசாய நிலங்களில் பேரழிவை ஏற்படுத்தும் வெட்டுக் கிளிகளை ஒலிபெருக்கியில் பாடலை சத்தமாக ஒலிக்க வைத்தும், இசை கருவிகளை இசைத்தும், பூச்சிக் கொல்லி மருந்தை தெளித்தும் விரட்டும் பணி நடைபெறுகிறது.
பாகிஸ்தானில் இருந்து குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் ஏப்ரல் மாதம் முதல் ஊடுருவிய வெட்டுக்கிளிகள், தற்போது அங்குள்ள 35 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்களில் பரவியுள்ளது.
காற்றின் திசை மாறினால் டெல்லிக்கும் வெட்டுக் கிளிகள் படையெடுக்கும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் டிராக்டர்கள் உள்ளிட்ட வாகனங்கள் மூலமாக பூச்சிக் கொல்லி மருந்துகள் தெளிக்கப்படுவதோடு, இசை கருவிகளை சத்தமாக இசைத்தும், ஒலிபெருக்கியில் பாடலை சத்தமாக ஒலிக்க வைத்தும் விரட்டும் பணி நடைபெறுகிறது.