உத்தரப் பிரதேச மாநிலம் மீரட் நகரில் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு குவாரண்டைன் என்றும் சானிட்டைசர் என்றும் பெற்றோர் பெயர் வைத்துள்ளனர்.
62 நாட்களாக நீடிக்கும் ஊரடங்கு காலத்தில் தர்மேந்திர குமார் மற்றும் அவர் மனைவி ரேணு ஆகியோருக்கு இந்த இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. மக்களிடையே கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இவ்வாறு பெயர் வைத்ததாக பெற்றோர் தெரிவித்தனர்