மேற்கு வங்கத்திற்கு புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்துவர இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
தினமும் 12 முதல் 15 ரயில்கள் வீதம் 206 ரயில்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்பிவைப்பதற்காக 34 ரயில்களை இயக்க அனுமதி கோரப்பட்டதாகவும் அதற்கு மேற்குவங்க அரசு அனுமதி அளிக்கவில்லை என்றும் மகாராஷ்ட்ரா அரசு மத்திய அரசுக்கு புகார் அளித்திருந்தது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மேற்குவங்கத்தின் உள்துறை செயலர் அலப்பன் பந்தோபத்யாயா, ரயில்களை இயக்குவதற்கு இருமாநிலங்களுக்கு இடையே பரஸ்பர ஒப்புதல் அவசியம் என்று கூறினார்.