மே 1ஆம் தேதி முதல் தற்போது வரை 3,276 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் மூலம் 42 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பியுள்ளனர்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ தரவுகளின் படி 2,875 ரயில்கள் பணிகளை முடித்துள்ள நிலையில், தற்போது 401 ரயில்கள் பணியில் ஈடுபட்டுள்ளன. அதிகபட்ச ரயில்கள் இயக்கப்பட்ட மாநிலங்களில் உத்தர பிரதேசம், பீகார், ஜார்கண்ட், ஒடிசா, மத்திய பிரதேசம் ஆகியவை முதல் 5 இடங்களை பிடித்துள்ளன.
உத்தர பிரதேசத்துக்கு 1,428 ரயில்களும், பீகாருக்கு 1,178 ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன. அதேபோல் குஜராத், மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்தர பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் இருந்து அதிகபட்சமான ஷ்ராமிக் ரயில்கள் தொழிலாளர்களை அழைத்து சென்றுள்ளன. அந்தவகையில் குஜராத்திலிருந்து 897 ரயில்களும், மராட்டியத்திலிருந்து 590 ரயில்களும் இயக்கப்பட்டுள்ளன.